பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு அவரது தாயின் 2-வது கணவர் கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து தாய் அவரை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்காமல் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சரோஜினி சிறுமியின் 2-வது தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவரை திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.