கைது 
செய்திகள்

திருப்பூரில் கள்ளக்காதலியின் மகள் பாலியல் பலாத்காரம்- எலக்ட்ரீசியன் கைது

திருப்பூரில் வீட்டில் தனியா இருந்த கள்ளக்காதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்:

திருப்பூர் வீரபாண்டி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது40). எலக்ட்ரீசியன். இவருக்கு அதே பகுதியில் கணவரை பிரிந்து 11 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வரும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் அருகே உள்ள கம்பெனிக்கு டெய்லர் வேலைக்கு சென்று வந்தார்.இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து சிவக்குமார் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டில் சென்று தங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் கணவன், மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.

அந்த பெண் வேலைக்கு சென்றதும் வீட்டில், சிறுமி மட்டுமே தனியாக இருப்பார். அப்போது வீட்டிற்கு வரும் சிவக்குமார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாய் வீரபாண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT