தற்கொலை 
செய்திகள்

செஞ்சி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை

செஞ்சி அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

மாலை மலர்

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள கட்டாஞ்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து(வயது 65). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன விரக்தியில் இருந்த முத்து தற்கொலை செய்ய முடிவு செய்து, நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.