ஜெர்மனி அதிபரை வரவேற்கும் அதிகாரிகள் 
செய்திகள்

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் டெல்லி வந்தடைந்தார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இன்று இரவு டெல்லி வந்தடைந்தார்.

புதுடெல்லி:

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அந்நாட்டின் 12 துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழுவினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இந்திய பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, நகர்ப்புற இயக்கம், விவசாயம் மற்றும் கால்பந்து ஆகிய துறைகளை பற்றி ஆலோசனை நடத்தப்படும். இரு நாடுகளுக்கிடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லின்ட்னெர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் இன்று இரவு இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

SCROLL FOR NEXT