லக்னோ:
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹோல்கர் எரிக் என்பவர் உத்தர்ப்பிரதேசம் மாநிலம் மிர்ஷாபுரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சை முடிந்து அகோரி கோட்டை செல்வதற்காக சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ரோபர்ட்ஸ்கஞ்ச் ரெயில் நிலையத்திற்கு வந்த அவருக்கு அங்கிருந்த அமான் குமார் என்பவர் வணக்கம் கூறியுள்ளர்.
ஆனால், எரிக் பதிலுக்கு வணக்கம் கூறாததால் அவரை கீழே தள்ளிவிட்டு குமார் தாக்கியுள்ளார். இதனையடுத்து, எரிக் போலீசில் புகாரளித்தார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமான் குமாரை கைது செய்தனர். வெல்கம் டூ இந்தியா என தான் கூறியதாகவும், அதற்காக எரிக் தன்னை தாக்கியதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஆக்ராவில் ஜெர்மனி தம்பதியினர் மீது அங்குள்ள கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது நினைவு கூறத்தக்கது.