காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டன் கோஸ்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதல் காலிறுதி நேரத்தில் நியூசிலாந்து 2 கோல்கள் அடித்து முன்னிலைப் பெற்றது. 2-வது காலிறுதி நேரத்தில் இந்தியா 1 கோல் அடித்தது. இதனால் முதல்பாதி நேரத்தில் இந்தியா 1-2 என பின்தங்கியிருந்தது.
2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. 3-வது காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 1-3 என பின்தங்கியது. கடைசி காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஒரு கோல் அடித்தது. பின்னர் ஆட்டம் முடியும் வரை இந்தியாவில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 என தோல்வியடைந்தது.
இந்த தோல்வியின் மூலம் முதல் இரண்டு பதக்கங்களை தவறவிட்ட இந்தியா, வெண்கல பதக்கத்திற்காக ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.