நாட்டிங்காம்:
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில்106 என்ற எளிய இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெயில் அதிரடியான தொடக்கம் தந்தார். உலகக் கோப்பையையின் முதல் ஆட்டத்தை அரை சதத்தோடு அவர் தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் அந்த ஆட்டத்தில் 3 சிக்சர்கள் விளாசிய கெயில், 40 சிக்சர்களுடன் உலகக் கோப்பையில் அதிக எண்ணிக்கையிலான சிக்சர்கள் விளாசியவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
37 சிக்சர்களுடன் ஏ பி டி வில்லியர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் (31 சிக்சர்), நான்காவது இடத்தில் பிரெண்டன் மெக்கலம் (29 சிக்சர்), ஐந்தாவது இடத்தில் ஹெர்ஷல் கிப்ஸ் (28 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதத்தை அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 6 அரை சதம் அடித்த 8வது வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.
மேலும் தனது அரை சதத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் 19000 ரன்களை அடைந்த 3வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரையன் லாரா மற்றும் சந்தர்பால் ஆகியோருக்கு பிறகு இந்த சாதனையை புரிந்த மூன்றாவது வீரர் ஆவார்.