செய்திகள்

ஆரல்வாய்மொழி அரிமா சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆரல்வாய்மொழி பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

மாலை மலர்

நாகர்கோவில்

ஆரல்வாய்மொழி அரிமா சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் நோய் ஒழிப்பு முகாமாக பள்ளி, கல்லூரி மற்றும் ஆரல்வாய்மொழி பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம் ஆரல்வாய்மொழி சித்தா அரசு ஆஸ்பத்திரியுடன் இணைந்து வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் லயன்ஸ் கவர்னர் டாக்டர். ராஜேந்திரன் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். அரிமா மாவட்ட தலைவர் எஞ்ஜினீயர் ஜஸ்டின்பால் முன்னிலை வகித்தார். சங்க மூத்த தலைவர்கள் செல்வம், மோகன்தாஸ், பூதலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசு சார்பில் ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் அன்வர் அலி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முத்துராமலிங்கம், ஆரல்வாய்மொழி செயல் அலுவலர் கமலேஷ்வரி, இளநிலை உதவியாளர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.