தற்போது ரஞ்சி டிராபியின் 5-வது சுற்று லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காம்பீர் விளையாடி வருகிறார். நேற்று காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தின் ‘‘தான் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளேன். இதற்கான மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ரத்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.
லோதா பரிந்துரையின்படி ஒரு வீரராக இருப்பவர் நிர்வாகக்குழுவில் இடம்பெறக்கூடாது. அப்படி இருந்தால் இரட்டை ஆதாயம் பெறுதல் என்ற சிக்கலுக்கு உள்ளாக்கப்படுவர் என்பது விதி.