நைஜீரியா நாட்டின் பெனு மாநிலத்தின் வழியாக பெட்ரோல் ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் லாரி நேற்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது.
டேங்கரில் இருந்து சாலையில் வழிந்தோடிய பெட்ரோலை பிடுத்துச் செல்வதற்காக உள்ளூர் மக்கள் பாத்திரங்களுடன் அங்கு குவிந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் பெட்ரோல் டேங்கர் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. அப்போது அவ்வழியாக கடந்து சென்ற பேருந்தின்மீது நெருப்பு பந்துகள் அடுத்தடுத்து பாய்ந்தன. இந்த கோர விபத்தில் 50 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.