பெரம்பூர்:
கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 7-வது பிளாக்கைச் சேர்ந்தவர் பாபு. ரெயில்வே ஊழியர். இவரது மனைவி கீதா, மகள் சர்மிளா, மகன் கிஷோர்.
கடந்த 22-ந்தேதி அதிகாலை வெங்கட பிரகாஷ் மின் சுவிட்ச்சை போட்டபோது சமையல் கியாஸ் கசிந்து இருந்ததால் தீப்பிடித்தது.
இதில் 4 பேரும் சிக்கி உடல் கருகினார்கள். அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பாபு, மகன் கிஷோர், மகள் சர்மிளா ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
கியாஸ் தீ விபத்தில் ஒரு குடும்பமே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.