எரிவாயு விபத்து (கோப்பு படம்) 
செய்திகள்

நைஜீரியாவில் எரிவாயு கசிந்து தீ விபத்து- 12 பேர் பலி

நைஜீரியாவின் காட்சினா மாநிலத்தில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

மாலை மலர்

அபுஜா:

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான காட்சினாவின் தன்முசா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் சனிக்கிழமை அன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் வசித்த பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த  தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த கோர விபத்தில்  3 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.