கியாஸ் சிலிண்டர் 
செய்திகள்

காரமடை அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து பெண் பலி

கோவை காரமடை அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

காரமடை:

கோவை காரமடை அருகே உள்ள பெள்ளாதி கருப்பராயன் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 40). சம்பவத்தன்று அம்பிகா தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து உள்ளது. இதையறியாமல் அம்பிகா எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த லைட் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது சிலிண்டர் வெடித்து வீட்டில் மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதில் சிக்கிய அம்பிகா வலிதாங்க முடியாமல் அலறித் துடித்தார். 

இதையடுத்து அவரை மீட்ட அவரது தந்தை காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா உயிரிழந்தார். 

இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.