கைது 
செய்திகள்

கெங்கவல்லி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

கெங்கவல்லி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கெங்கவல்லி:

கெங்கவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆணையம்பட்டி புதூர் வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த 2 மாட்டு வண்டியை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் பூமாலை, நாகராஜ் என்பதும், ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.