கைது 
செய்திகள்

கெங்கவல்லி அருகே மது விற்ற 2 பேர் கைது

கெங்கவல்லி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கடம்பூர் ஏரிக்கரை ஓரமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த காந்தி (வயது 65), ஆணையம்பட்டி ஊராட்சியில் சந்திரா (52) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.