அலகாபாத்:
வட இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கங்கா மற்றும் யமுனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அலகாபாத் (பிரயாங்ராஜ்) நகரில் உள்ள 150-க்கும் அதிகமாக கிராமங்கள் வெள்ளத்தில் ழூழ்கின. நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கனக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.