நிலக்கோட்டை:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டியை சேர்ந்தவர் சசி (வயது20). இவர் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.
வெளியே சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். கிடைக்கவில்லை. மேலும் விசாரித்தபோது சசி இளம்பெண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து விளாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து சப்-இன்ஸ் பெக்டர் பரமேஸ்வரன் பெண்ணை கடத்திய சசி, அவரது தந்தை உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.