கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே காடவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(வயது 36). விவசாயியான இவர் நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்றபோது தஞ்சாவூரில் இருந்து வேகமாக வந்த கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் அங்கு வந்து, தேவதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.