செய்திகள்

வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #TNRains

மாலை மலர்

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் காலை 11 மணிக்கு வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆனது. தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.