பிரேசிலில் கடந்த மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இறுதிபோட்டியில் 70-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் கேப்ரியல் ஜீசஸ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
மைதானத்தை விட்டு வெளியேறுகையில் அவர் போட்டி அதிகாரிகள் உட்கார அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக ‘டக்-அவுட்’ மற்றும் வீடியோ உதவி நடுவருக்காக வைக்கப்பட்டு இருக்கும் மானிட்டரை உதைத்து தள்ளினார். பிறகு நடந்த சம்பவத்துக்காக கேப்ரியல் ஜீசஸ் வருத்தம் தெரிவித்தார்.