ஒசாகா:
ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சி மாநாடு தொடங்கியது.
ஜி 20 மாநாடுகளை நடத்தும் நாடுகள் சார்பாக உலக தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுவது மரபாக உள்ளது.
அந்த வகையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று இரவு விருந்து அளித்தார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷியா அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.