அஜித் 
செய்திகள்

கடுமையான வறுமை.. எண்ணற்ற பணிகள் -இத்தனை கஷ்டத்திலும் பி.எச்.டி முடித்த இளைஞர்

கேரளாவில் இளைஞர் ஒருவர், பல்வேறு வேலைகளுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் பி.எச்.டி முடித்துள்ளார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

மாலை மலர்

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முவத்துபுழா பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(30). பொதுவாக தன்னம்பிக்கையான ஒருவரின் வாழ்வில் என்னென்ன கஷ்டங்கள் சினிமாவில் காண்பிக்கப்படுகிறதோ, அதேபோல இவரது வாழ்வில் நிஜமாக நடந்துள்ளது.

அஜித் பிறந்து 3 மாதங்கள் ஆனபோதே, அவரது தாய்-தந்தைக்கு இடையே விவாகரத்து ஆகிவிட்டது. தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்தான் அஜித். அப்பாவின் பாசமே அறியாதவர். அவரது தாயை உறவினர்கள், எத்தனையோ முறை மறுமணம் செய்யக் கூறியும் செய்துக் கொள்ளவில்லை. அஜித்திற்காகவே வாழ்ந்து வந்துள்ளார்.

கடுமையான வறுமை, வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சாரம் ஏதும் இல்லாத சூழல். இருப்பினும் பள்ளி படிப்பை விடாமல் தொடர்ந்து வந்து முடித்துள்ளார். அஜித், 8ம் வகுப்பு படித்தபோது குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையால் மரம் ஏறும் பணியில் ஈடுபட்டுவிட்டார்.

இருந்தபோதும் கல்வியை விடவில்லை. அவரது தாயார் பழ தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.  பின்னர் 10ம் வகுப்பு வந்தபோது அருகில் உள்ள கல்குவாரிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்ததும் மீன் விற்கச் சென்றுள்ளார்.

அந்த வற்புறுத்தல், தன்னம்பிக்கையை அஜித்துக்கு அளிக்கவே, அவர் இன்று பி.எச்.டியும் முடித்துவிட்டார். இவர் கல்லூரியில் படிக்கும்போதே ஆட்டோ ஓட்டுனராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.