செய்திகள்

வாரணாசி கங்கை ஆற்றில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் படகு சவாரி

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கங்கை ஆற்றில் பிரதமர் மோடியுடன் படகில் சென்று வாரணாசி நகரை பார்வையிட்டார்.

மாலை மலர்

லக்னோ:

இந்தியாவிற்கு 4 நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தன் மனைவியுடன் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரை வந்தடைந்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மிகபெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கங்கை ஆற்றில் படகில் சென்று பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோருடன் வாரணாசி நகரை பார்வையிட்டார். கங்கை ஆற்றங்கரையில் கோயில்கள் நிறைந்த இந்தியாவின் பழைமையான வாரணாசி நகரின் இரு கரைகளின் ஓரம் நின்றிருந்த மக்கள் அளித்த உற்சாக வரவேற்பை அவர்கள் ஏற்றுகொண்டனர்.