கோப்புபடம் 
செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு

தமிழகத்தில் ‘உஜ்வாலா 2.0’ திட்டம் முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வரும்.

திருப்பூர்:

கடந்த 2016 முதல் மத்திய அரசின் ‘உஜ்வாலா’ திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘உஜ்வாலா 2.0’ என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். 

இதுகுறித்து திருப்பூர் பாரத் எண்ணை நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்கள் 2024க்குள் கியாஸ் தேவையில் தன்னிறைவு பெறும். ஏழை பெண்கள் பெயரில் இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்படும். அதற்காக மாவட்டம் தோறும் ஒரு எண்ணை நிறுவனம் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்கள், இலவச கியாஸ்  இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.

புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் இத்திட்டத்தால் அதிகம் பயன்பெறுவர். சொந்த மாநிலத்தில் இலவச கியாஸ் இணைப்பு இருந்தாலும்  தற்போதுள்ள மாநிலத்திலும் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பெயரில் இலவச கியாஸ் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். 

முகவரி சான்று இல்லாமல் ஆதார் எண்ணை பயன்படுத்தி இணைப்பு பெறலாம். தமிழகத்தில் ‘உஜ்வாலா 2.0’ திட்டம் முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.