செய்திகள்

மூன்று சக்கரம் கொண்ட ஸ்போர்ட் பைக்: யமஹா அறிமுகம் (வீடியோ)

டோக்கியோவில் நடைபெற்று வரும் மோட்டார் விழாவில் யமஹா நிறுவனத்தின் மூன்று சக்கரங்கள் கொண்ட ஸ்போர்ட் பைக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாலை மலர்

டோக்கியா மோட்டார் விழாவில் யமஹா நிறுவனம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய மாடல் ஸ்போர்ட்பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. யமஹா நிகென் என அழைக்கப்படும் புதிய மோட்டார்சைக்கிள் மூன்று சக்கரங்களை கொண்டுள்ளது.

வழக்கமான பின்புறம், யமஹாவின் லிக்விட்-கூல்டு இன்லைன் மூன்று-சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. முன்பக்கம் இரண்டு ஃபோர்க் மற்றும் வீல்களை கொண்டிருப்பது மோட்டார்சைக்கிள் எதி்ர்கால ரதம் போன்று காட்சியளிக்கிறது. இவ்வகையான வடிவமைப்பு ஓட்டுநருக்கு வளைவுகளில் அதிக சவுகரியம் மற்றும் மிக எளிமையாக கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

யமஹா நிகென் இரண்டு 15-இன்ச் வீல்கள் மற்றும் டூயல்-டியூப் அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது. இது மொத்தமாக 885 மில்லிமீட்டர் அளவு அகலமாகவோ அல்லது 35 இன்ச் அளவு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கான விளம்பர வீடியோவில் நின்ஜா பயிற்சி பெற்றவர்  நிகென் மோட்டார்சைக்கிளில் சீறிப்பாயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை ஸ்கூட்டர்கள் அல்லது ஆட்டோசைக்கிள்களில் மூன்று சக்கரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், மோட்டார்சைக்கிளின் முன்புறம் இரண்டு சக்கரங்கள் வழங்கப்பட்டிருப்பது வாகனத்தின் தோற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறது. புதிய மோட்டார்சைக்கிள் சார்ந்த மற்ற தகவல்கள் வழங்கப்படவில்லை.

புதிய யமஹா நிகென் மோட்டார்சைக்கிளின் விளம்பர வீடியோவினை கீழே காணலாம்..,