பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் 
செய்திகள்

சொகுசு காரில் செம்மரக்கட்டை கடத்தல் - 4 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே சொகுசு காரில் செம்மரக்கட்டைகளை கடத்திய 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் சந்திப்பில் கவரப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனார் காரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்தாமல் பெரிய பாளையம் சாலையில் தப்பிச் சென்றனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் ஜீப்பில் அந்தக் காரை விரட்டிச்சென்று ஆரணி அருகே மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்த போது சுமார் 1 டன் எடை உள்ள உயர்ரக செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து காரில் இருந்த வேலூரை சேர்ந்த சதாசிவம், பாபு, சேலத்தை சேர்ந்த ரமேஷ்வரன், திருவண்ணாமலையை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செம்மரக்கட்டைகள் கிடைத்தது எப்படி? யாருக்கு கடத்தி செல்லப்படுகிறது. என்பது குறித்து கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT