இந்தூர்:
வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிட்டட் என்ற நிலக்கரி நிறுவனம் மத்தியப்பிரதேசம் மாநிலம், பேட்டுல் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தை குத்தகை எடுத்து நிலக்கரியை வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்தது.
இந்த நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியை அந்நிறுவனம் கைவிட்ட பின்னர் அருகாமையில் வசிக்கும் பெண்கள் அந்த சுரங்கத்துக்குள் சிதறி கிடக்கும் நிலக்கரி துண்டங்களை அவ்வப்போது சேகரித்து வந்து விற்றும் சமையலுக்கு பயன்படுத்தியும் வருகின்றனர்.
அவ்வகையில், இன்று வழக்கம்போல் சில பெண்கள் நிலக்கரி சேகரிப்பதற்காக இந்த சுரங்கத்துக்கு சென்றனர். அப்போது சுரங்கத்தின் ஒருபகுதி திடீரென்று இடிந்து விழுந்து உள்வாங்கி கொண்டது. தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் பிரேதங்களை மீட்டனர். சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews #minecaves #coal