காபூல்:
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தானின் எல்லையோரம் அமைந்துள்ள மலாகந்த் மாகாணம் தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக உள்ளது. இம்மாகாணத்தில் தாலிபான்கள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை அழிக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இம்மாகாணத்தில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் வழக்கமான தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தான். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 பேர் உடல் சிதறி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டின் புதிய பிரதமர் அப்பாஸி, உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் தீவிரவாதிகள் பதில் கூற வேண்டும் என கூறியுள்ளார்.