செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்டர்- 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #KashmirEncounter

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் பணியில் போலீசும், ராணுவமும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்தது.