போபால்:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் சில திருத்தங்கள் செய்து உத்தரவிட்டிருந்தற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் நடந்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் பேருந்து, கார் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டன. குஜராத், ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் ரெயில்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கலவரம் நடந்து வரும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் குவாலியர், ப்ஹிந்த், மோரேனா மற்றும் சாகர் பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் நால்வர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #BharatBandh #TamilNews