லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இன்று காலை வழக்கம்போல் கைதிகள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது. அப்போது, 4 கைதிகள் காணாமல் போனது தெரியவந்தது. சிறைச்சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்பை ஒட்டியுள்ள பிரதான மதில் சுவரில் ஏறி குதித்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
கைதிகள் தப்பிச் செல்வதற்கு சிறையில் இருந்தவர்கள் உதவி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லூதியானா சிறைச்சாலையின் பாதுகாப்பு பொறுப்பை சிஆர்பிஎப் ஏற்ற பிறகு நடந்த முதல் சம்பவம் இதுவாகும்.