செய்திகள்

டொமினிகாவில் தொழிற்சாலையின் பாய்லர் வெடித்து தீவிபத்து - 4 பேர் பலி

டொமினிகாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு காரணமாக பாய்லர் வெடித்து தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். #DominacanGasBlast

டொமினிகா தலைநகர் சான்டோ டொமிங்கோவின் வில்லாஸ் அக்ரிகோலஸ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாய்லர் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.

இதன் காரணமாக தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.