செய்திகள்

புயல் எதிரொலி - பிஜி தீவில் மழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி

பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள தீவுப்பகுதியான பிஜி நாட்டுக்கு உட்பட்ட பா நகரை நேற்று ‘ஜோசி’ புயல் கடுமையாக தாக்கியது.

மாலை மலர்

புயலின் எதிரொலியாக கொட்டித் தீர்த்த பெருமழையால் பா நகர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கின் விளைவாக 74 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அரசின் தற்காலிக முகாம்களில் சுமார் 2 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பிரேதங்கள் இதுவரை கிடைத்துள்ளதாகவும், வெள்ளநீரில் மூழ்கி காணாமல்போன ஒருவரை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருக்கும் வெள்ளம் முற்றிலுமாக வடிந்து, கொசு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கும் பணிகள் முடிவடையும்வரை இரண்டு மூன்று நாட்களுக்கு தங்களது வசிப்பிடங்களுக்கு செல்ல வேண்டாம் என முகாமில் உள்ள மக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். #tamilnews