செய்திகள்

பீகாரில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன - பயணிகள் தப்பினர்

பீகார் மாநிலத்தின் தனாப்பூர் நிலையம் அருகே இன்று மாலை ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #JanSadharanExpress #Danapurstation

பாட்னா:

பீகார் மாநிலத்தின் செயற்கைக்கோள் நகரம் என்றழைக்கப்படும் தனாப்பூர் நிலையத்தில் இருந்து டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியை இணைக்கும் வகையில் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் தனாப்பூர் நிலையம் அருகே இன்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த ரெயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #JanSadharanExpress #Danapurstation

SCROLL FOR NEXT