செய்திகள்

டெல்லியில் மூன்றடுக்கு வீடு இடிந்த விபத்தில் 4 குழந்தைகள் பரிதாப பலி

டெல்லியில் இன்று மூன்றடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். #childrenkilled #Delhibuildingcollapse

புதுடெல்லி:

வடமேற்கு டெல்லி, அசோக் விஹார் பகுதியில் ஒரு மூன்றடுக்கு மாடி வீடு இன்று காலை 9.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்துவந்த பல குடும்பத்தினர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து சிலரை காயங்களுடன் மீட்டனர். மேலும், 10 வயதுக்குட்பட்ட இரு சகோதர்கள், 5 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி, ஒரு பெண் ஆகிய 5 பேர் பிரேதமாக மீட்கப்பட்டனர்.

சுமார் 20 ஆண்டுகள் பழைமையான அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #childrenkilled  #Delhibuildingcollapse

SCROLL FOR NEXT