செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே உல்லாசத்துக்கு பெண்ணை அழைத்த 4 பேர் கைது

ஆண்டிபட்டி அருகே உல்லாசத்துக்கு இளம்பெண்ணை அழைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலூத்து கிராமத்தை சேர்ந்தவர் சேர்மலை. அவரது மனைவி செல்லமணி. (வயது 24). இவர் நேற்று தனது வீட்டுப்பக்கம் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன், பாஸ்கரன், நெப்போலியன், பாலமுருகன் ஆகியோர் வந்தனர். இந்த 4பேரும் செல்லமணியை பார்த்து 100 ரூபாய் தருகிறோம் உல்லாசத்துக்கு வா, நீ அப்படிப்பட்ட ஆள்தான் என்று கூறினர்.

அதிர்ச்சி அடைந்த செல்லமணி இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சரவணன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.