கல்யாண் சிங் 
செய்திகள்

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்

கல்யாண் சிங்கிற்கு லக்னோ மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மாலை மலர்

லக்னோ:

ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியுமான கல்யாண் சிங் (வயது 89),  உடல்நலக் குறைவு காரணமாக லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாலும் சுய நினைவு குறைந்ததாலும், ஜூலை 4ம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

மருத்துவமனையின் சிறுநீரகவியல், இதயவியல், நரம்பியல், எண்டோகிரைனாலஜி மற்றும் நியூரோ-ஓட்டாலஜி துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. உடல் உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்தன.

இந்நிலையில் இன்று இரவு கல்யாண் சிங் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.