தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.
ரவீந்திர நாத்குமார் பெயர் இடம் பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க வந்த அ.தி.மு.க வக்கீல் அணியினர்.