புதுடெல்லி:
பாஜகவை தோற்றுவித்தவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு குடும்பத்தினர், பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி செலுத்துவார்கள். நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் வைக்கப்பட உள்ளது.
பின்னர், விஜய் காட் பகுதியில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பின்னர், அங்கு அவருக்கான நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.