செய்திகள்

சரத் பவாரின் அரசியல் பயணம்: மன்மோகன் சிங் புதிய நூலை வெளியிட்டார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அரசியல் பயணம் தொடர்பான புதிய நூலை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மராட்டிய மாநிலம் அவுரங்காபாதில் இன்று வெளியிட்டார்.

மாலை மலர்

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வருபவர் சரத் பவார். இவரது அரசியல் பயணம் தொடர்பான புதிய நூல் வெளியீட்டு விழா அவுரங்காபாத் நகரில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மந்திரிசபையில் பாதுகாப்பு துறை மந்திரியாக சரத் பவார் சிறப்பாக செயல்பட்டதை மன்மோகன் சிங் நினைவு கூர்ந்தார்.

மேலும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது முதல் மந்திரியாக இருந்த சரத் பவார் அந்த சூழ்நிலையை மிகவும் திறமையாக கையாண்டார் எனவும் குறிப்பிட்டார்.