ராஜ கண்ணப்பன் 
செய்திகள்

மீண்டும் திமுகவில் இணையும் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்

முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வருகிற 23-ந்தேதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்.

மாலை மலர்

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். முக்கிய அமைச்சராக இருந்த அவர், கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டு மக்கள் தமிழ் தேசம் எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.

அதன் பிறகு 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் தனது கட்சியை இணைத்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும் அ.தி.மு.க.விற்கு திரும்பினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜ கண்ணப்பன் சிறிது காலம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தார். தற்போது அவர் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளார்.

இதனை பார்வையிட ராஜ கண்ணப்பன் மதுரை வந்தார். அப்போது தி.மு.க. சார்பில் நடந்த குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திலும் பங்கேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் 50 ஆண்டு காலமாக செயல்பட்டு கொண்டிருக்கும் தி.மு.க. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. 12 கோடி மக்களின் உரிமையை பாதுகாக்கக்கூடியவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. இந்திய அளவில் மகத்தான வெற்றி பெற்றதை யாராலும் மறுக்க முடியாது. எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்த சரியான தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அதனால் அவரோடு இணைந்து செயல்பட உள்ளோம்.

இந்தியா மதசார்பற்ற நாடு. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் அதற்கெதிரானது. இதுபற்றி ரஜினி கூறிய கருத்து சரியல்ல. மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.