செய்திகள்

போளூரில் தி.மு.க. மறியல் - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். #CauveryManagementBoard #DMK

மாலை மலர்

போளூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் செய்தனர்.

போளூர் எம்.எல்.ஏ. சேகரன், என்.கே.பாபு, தமிழ்குமரன் உள்பட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 500 பேரையும் போளூர் போலீசார் கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #CauveryManagementBoard #DMK