செய்திகள்

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு: இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு சிறப்பு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுக்கு விதிகளை மீறி குறைந்த விலையில் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நடைமுறையில் சட்ட விதிமுறைகள் மீறியதாகவும், இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் எனவே, இதில் மாதவன் நாயர் உள்பட 4 விஞ்ஞானிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கிடையே, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சி.பி.ஐ. கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறி இன்று சம்மன் அனுப்பியுள்ளது.