பாராளுமன்ற தேர்தலையொட்டி, 2019-20-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயல், பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.
தேர்தல் நடந்து முடிந்து, பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.
பதவி ஏற்ற சூட்டோடு சூடாக அவர் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். இதையடுத்து இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார்.
இது அவரது முதல் பட்ஜெட் ஆகும். இந்நிலையில் நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து முன்னாள் நிதி மந்திரியான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.