கோப்பு படம். 
செய்திகள்

வெள்ளியணை அருகே கூட்டுறவு வங்கி முன்னாள் ஊழியர் மயங்கி விழுந்து பலி

வெள்ளியணை அருகே கூட்டுறவு வங்கி முன்னாள் ஊழியர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறாரகள்.

மாலை மலர்

வெள்ளியணை:

வெள்ளியணை மேற்கு தெரு, முருகன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன்(வயது 58). இவர் திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 

இந்த நிலையில் நேற்று சொந்த ஊரான கோம்பைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி சென்றவர், கரூர் வெள்ளியணை சாலையில் சின்னமநாயக்கம்பட்டி பிரிவு அருகே மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் இதுகுறித்து அவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து அங்கு சென்ற மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.