செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர்

பொய் வாக்குமூலம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

மாலை மலர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் அனுராக் தாகூர். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சிஏஜி நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்படி நியமித்தால் தனித்து இயங்கும் பிசிசிஐ-யில் அரசு தலையீடு இருக்கும் என அனுராக் தாகூர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து ஐசிசி தலைவராக இருக்கும் ஷஷாங்க் மனோகரிடம் கருத்து கேட்டார். ஷஷாங்க் மனோகர் ஏற்கனவே பிசிசிஐ தலைவராக இருந்தவர். கடிதம் மூலம் தங்களை கருத்தை தெரிவிக்க கோரினார். ஆனால் மனோகர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது ஐ.சி.சி. தலைவரிடம் ஆலோசனை கேட்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தார்.

ஆனால், நீங்கள் ஐ.சி.சி. தலைவரிடம் ஆலோசனை கேட்டதற்கு ஆதாரம் உள்ளது. நீங்கள் கோர்ட்டில் பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள். அதனால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இல்லையெனில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.

இதுகுறித்து அனுராக் தாகூர் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் சூழ்நிலையை விளக்கி மன்னிப்பு கோரியிருந்தார். இதனை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது. மேலும், நிபந்தனையற்ற மற்றும் தகுதியற்றவர் என்ற முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்னு கேட்டுக்கொண்டது.

அதன்படி இன்று சுப்ரீம் கோர்ட்டில் அனுராக் தாகூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இன்று அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ‘‘தவறாக சில தகவல் அளித்தருந்தால், அதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டிற்கு மகத்துவத்தை எந்த அளவில் குறைத்து மதிப்பீடும் நோக்கத்திலும் நான் செயல்படவில்லை. அதற்கான நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.