சிங்கை:
சிங்கை டாணா மேட்டு பாளையம் தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது76). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணம், 7 பவுன் நகைகளை திருடி விட்டு தப்பி ஓடி விட்டான். மறுநாள் காலையில் எழுந்த அந்தோணிசாமி வீட்டின் கதவு திறந்து கிடப்பதையும், பீரோவில் இருந்த நகை -பணம் திருட்டு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் சிங்கை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.