நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டவர் 
செய்திகள்

வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த ஒருவர் கைது

செங்கம் வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

செங்கம் அடுத்த நீப்பத்துறை வனக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட செங்கம் வனச்சரகர் ராமநாதனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராமநாதன் மற்றும் அவரது குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தென்பெண்ணை பீட் பகுதியில் சென்றபோது துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மேல்பாச்சார் பகுதியை சேர்ந்த விஜயகுமார்  மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்றும் 16 நாட்டு வெடிகுண்டும் கைப்பற்றினர்.