செய்திகள்

புளியரை அருகே வனப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்

புளியரை அருகே வனப்பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள புளியரை அருகில் தமிழக-கேரளா எல்லை பகுதியில் இருக்கும் எஸ் வளைவு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இவர் நேற்று தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வழியாக சென்றோர் பார்த்து புளியரை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து  இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என புளியரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.