செய்திகள்

வடகொரியாவில் நிர்மூலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடம் - பார்வையிட சென்ற பத்திரிகையாளர் குழு

வடகொரியாவில் நிர்மூலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடங்களை நேரில் பார்வையிட சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு அங்கு சென்றுள்ளது. #nuclearsite #NorthKorea

மாலை மலர்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.